விருத்தாசலம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கடலூர் மாவட்டத்தில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகராட்சி.

பெயர்க்காரணம்

“விருத்தம்”(=பழைய) மற்றும் “அசலம்”(=மலை) எனும் இரு வடமொழி சொற்களின் கூட்டே “விருத்தாசலம்” ஆகும். தமிழில் “திருமுதுகுன்றம்” எனவும் “பழமலை” என்றும் வழங்கப்படுகிறது.